நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்கள்


நாட்டில் நேற்றைய தினம் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணாப்பட்ட 1531 பேரில் 533 நோயாளிகள் கொழும்பு மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொவிட்-19 தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய இலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கையானது 106,484 ஆகவும் அதிகரித்துள்ளது .

நேற்றைய தினம் கொழும்பு மாவட்டத்தில் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டவர்களில் அதில் 129 பேர் பிலியந்தலை, 61 பேர் கொழும்பு மாநகர சபைக்கு உட்பட்டவர்கள் , 31 பேர் முல்லேரியா, 27 பேர் வெல்லம்பிட்டிய மற்றும் 19 பேர் மொரட்டுவை சேர்ந்தவர்களாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .

தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்ட 1531 பேரும் இலங்கையின் 24 மாவட்டங்களையும் சேர்ந்தவர்களாகவுள்ளனர்.

நேற்றைய தினம் மன்னார் மாவட்டத்தில் எந்தவொரு கொரோனா நோயாளர்களும் அடையாளம் காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

கம்பஹா மற்றும் களுத்துறையில் தலா 145 பேர் , குருநாகலில் 107 பேர் ,கண்டியில் 85 பேர் ,கண்டியில் 84 பேர் ,பொலன்னறுவையில் 48 பேர் ,மாத்தறையில் 46 பேர் , அம்பாந்தோட்டை மற்றும் நுவரெலியாவில் தலா 43 பேர் ,அனுராதாபுரம் மற்றும் மாத்தளையில் தலா 35 பேர் , இரத்தினபுரியில் 22 பேர் ,அம்பாறையில் 19 பேர், யாழ்ப்பாணத்தில் 17 பேர் , மொனராகலையில் 16 பேர் ,மட்டக்களப்பில் 14 பேர் , பதுளை மற்றும் புத்தளத்தில்

தலா 13 பேர் , , திருகோணமலை மற்றும் வவுனியாவில் தலா 7 பேர், கிளிநொச்சியில் மூவர் , முல்லைத்தீவில் ஒருவர் என்ற ரீதியில் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

வெளிநாட்டிலிருந்து வருகை தந்த 40 பேரும் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொவிட் -19 தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது

No comments: