தேங்காய் எண்ணெய் பீப்பாய்களுடன் சென்ற கொள்கலன் லொறி - வேன் விபத்து


தேங்காய் எண்ணெய் பீப்பாய்களுடன் சென்ற கொள்கலன் லொறியொன்றும் வேன் வாகனமொன்றும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.

கட்டுபொத, வாரியபொல வீதியின் கல்வெவ பிரதேசத்தில் நேற்றைய தினம் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

கொள்கலன் லொறி வேகக்கட்டுப்பாட்டை இழந்து எதிரில் வந்த வேனில் மோதுண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், விபத்து இடம்பெறும் போது கொள்கலன் லொறியின் சாரதி மதுபோதையில் இருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த விபத்தில் காயமடைந்த கொள்கலன் சாரதி உட்பட ஒன்பது பேர் கட்டுபொத வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன்,விபத்து தொடர்பில் கொள்கலன் லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில் சம்பவம் தொடர்பில் கட்டுபொத பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

No comments: