இப்போதைக்கு திருமணம் செய்து கொள்ளும் ‘ஐடியா’ இல்லை - சுனைனா


காதலில் விழுந்தேன்’ படத்தின் முலம் அறிமுகமானவர், சுனைனா. நீர் பறவை, வம்சம் உள்பட பல படங்களில் நடித்து இருக்கிறார்.

கடந்த ஆண்டு திரைக்கு வந்த ‘சில்லுக்கருப்பட்டி’ படத்தில் இவருடைய நடிப்பை பலரும் பாராட்டினார்கள். இதையடுத்து வெளிவந்த ‘ட்ரிப்’ படத்திலும் அவர் நடித்து இருந்தார்.இது தவிர, ஒரு தெலுங்கு படத்திலும் அவர் நடித்து வருகிறார். இந்த நிலையில், சுனைனா திருமணம் செய்து கொள்ளப்போவதாக ஒரு தகவல் வெளியானது.

இதுபற்றி அவரிடம் கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்து அவர் கூறியதாவது:-

‘‘நான் திருமணம் செய்து கொள்ளப்போவதாக வெளியான தகவலில் உண்மை இல்லை. அது வதந்தி. இப்போதைக்கு திருமணம் செய்து கொள்ளும் ‘ஐடியா’ இல்லை.என்னைத்தேடி இப்போது நல்ல பட வாய்ப்புகள் வருகின்றன. என்னை முக்கிய கதாபாத்திரமாக வைத்து சில டைரக்டர்கள் திரைக்கதை எழுதி வருகிறார்கள். அதனால் நடிப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகிறேன். திருமணம் பற்றி பேசுவதை விட, நான் நடிக்கும் படங்கள் பற்றி பேசுவதையே விரும்புகிறேன்.’’

இவ்வாறு சுனைனா கூறியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments: