வேகமாக முடிவெடுத்த தோனி.. அந்த ரிவ்யூ கூட எடுக்கவில்லை.. ஏன் இவ்வளவு பதற்றம்?


நேற்று மைதானத்தில் தோனி அவசரமாக நிறைய முடிவுகளை எடுத்தார், முக்கியமான ஒரு ரிவ்யூவை கூட தோனி நேற்று கேட்கவில்லை. 

நேற்று பஞ்சாப்பிற்கு எதிராக சிறப்பாக ஆடிய சிஎஸ்கே அணி அதிரடியாக வென்றது. இந்த போட்டியில் எப்படியாவது வெற்றிபெற்றே ஆக வேண்டும் என்ற நம்பிக்கையில் சிஎஸ்கே களமிறங்கியது. 

நேற்று டாஸ் வென்றும் சிஎஸ்கே அணிக்கு சாதகமாக அமைந்தது. இதையடுத்து சிஎஸ்கே பஞ்சாப்பை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் தோனி கொஞ்சம் அவசரமாக முடிவுகளை எடுத்தார். முதல் இன்னிங்சில் வேகமாக செயல்பட்டார். சிஎஸ்கே அணி டெல்லிக்கு எதிரான முதல் போட்டியில் பவுலிங் செய்ய அதிக நேரம் எடுத்துக்கொண்டதாக புகார் வைக்கப்பட்டது. இதனால் தோனிக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

பவுலிங் செய்யும் அணி அந்த இன்னிங்க்ஸை 90 நிமிடத்திற்குள் முடிக்க வேண்டும். இல்லையென்றால் அபராதம் விதிக்கப்படும். தொடர்ந்து இரண்டு போட்டிகளில் இந்த விதியை மீறினால், அணியின் கேப்டன், அடுத்த இரண்டு போட்டிகளுக்கு ஆட முடியாது.

இதனால் கடந்த போட்டியில் தவறு செய்த தோனி நேற்று போட்டியிலும் தவறு செய்திருந்தால் 2 போட்டிகளில் ஆட தடை விதிக்கப்பட்டு இருக்கும். இதை தவிர்க்க வேண்டும் என்பதற்காக தோனி நேற்று அவசரமாக ஆடினார். பவுலிங் இன்னிங்க்ஸை தோனி 88 நிமிடங்களிலேயே முடித்து சாதனை புரிந்தார்.

இதற்காக தோனி பறக்க பறக்க பீல்டிங் செட்டப் செய்தார். அதோடு சாகர் ஓவரில் ஷாருக்கான் அவுட் போல இருந்தது. சாகர் வீசிய 7வது ஓவரில் ஷாருக்கான் எல்பிடபிள்யூ ஆனது போல இருந்தது. இதற்கு சாகர் ரிவ்யூ கேட்டார்.

பந்து அதிக உயரத்தில் செல்வது போல இருந்தது. இதனால் விக்கெட் இல்லை என்று தோனிக்கு தெரியும். எனவே, ரிவ்யூ எடுத்து நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று தோனி ரிவ்யூ கேட்கவில்லை. அதோடு சாகரிடமும் ரிவ்யூ கேட்க முடியாது, சீக்கிரம் போ என்பது போல தோனி சைகை செய்தார்.

No comments: