நேற்றைய தினத்தில் மாத்திரம் வாகன விபத்துக்களில் 10 பேர் உயிரிழப்பு


நேற்றைய தினத்தில் மாத்திரம் வாகன விபத்துக்களில் 10 பேர் உயிரிழந்ததாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

கடந்த 72 மணி நேரத்தில் வாகன விபத்துக்களில் 40 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கடந்த 14ம் திகதி வாகன விபத்துக்களால் 14 இறப்புகளும், 15ம் திகதி 16 இறப்புகளும் பதிவாகியுள்ளதாக அவர் கூறியள்ளார்.

கவனயீனத்துடன் வாகனம் செலுத்தியதால் இந்த மரணங்கள் நிகழ்ந்துள்ளன என்றும் போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments: