பாடசாலைகளின் முதலாம் தவணைக்கான கல்வி நடவடிக்கை இன்று நிறைவடைகின்றது


நாட்டிலுள்ள அனைத்து  அரசாங்க பாடசாலைகளினதும் முதலாம் தவணைக்கான கல்வி நடவடிக்கை, இன்று நிறைவடைவதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

கல்வியமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு இன்று மூடப்படுகின்ற அனைத்து அரச பாடசாலைகளும் எதிர்வரும் ஏப்ரல் 19ம் திகதி, இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைக்காக மீள திறக்கப்படும் என கல்வியமைச்சு குறிப்பிட்டுள்ளது.

Post a Comment

0 Comments