சங்கமன்கண்டி பகுதியில் விகாரை அமைப்பதற்கு மக்கள் தடை


அம்பாறை மாவட்டம் பொத்துவில் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட சங்கமன்கண்டி பிரதேசத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பௌத்த விகாரையொன்று அமைப்பதற்கு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது.

மக்களின் தலையீட்டினால் குறித்த நடவடிக்கை உடன் நிறுத்தப்பட்டிருந்தாலும் அதன் பிறகு, இன்று சங்கமன்கண்டி மக்களிடம் அதற்கான அனுமதி கோரப்பட்ட வேளை மக்களால் இன்று அனுமதி மறுக்கப்பட்டுள்ளதுடன்  விகாரை அமைப்பதற்கு சம்மதம் இல்லை என்று  மக்களால் கையெழுத்து ஆவணம் உருவாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

விகாரை அமைப்பதற்கு சங்கமன்கண்டி  மக்களிடம்  அனுமதி பெறுவதற்கான கலந்துரையாடல் இன்று குறித்த பகுதியில் இடம் பெற்ற வேளை மக்களால் அனுமதி மறுக்கப்பட்டது.

Post a Comment

0 Comments