ரிலீஸானது தனுஷின் ‘கர்ணன்’


மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள கர்ணன் திரைப்படம் இன்று திட்டமிட்டபடி தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் ரிலீஸாகியுள்ளது.

சந்தோஷ் நாராயணன் இசையில் பாடல்களும் ’கர்ணன்’ டீசரும் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. மாரி செல்வராஜின் முதல் படமான ‘பரியேறும் பெருமாள்’ பல்வேறு விருதுகளைக் குவித்ததால் ‘கர்ணன்’ படத்திற்கு ஏதிர்பார்ப்புகள் அதிகரித்திருந்தன. தொடர்ந்து கர்ணன் படத்தை இன்று ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டிருந்தது.

இதனிடையே கொரோனா பரவல் 2வது அலை காரணமாக நாளை முதல் 50% இருக்கைகளுடன் மட்டுமே திரையரங்குகள் செயல்பட வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. இதனால் கர்ணன் திரைபடம் திட்டமிட்டபடி ரிலீஸ் ஆகுமா என்ற கேள்வி எழுந்தது. ஆனால் திட்டமிட்டபடி கர்ணன் திரைப்படம் ரிலீஸ் ஆகும் என படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதன்படி தற்போது கர்ணன் திரைப்படம் ரிலீஸ் ஆகியுள்ளது.

Post a Comment

0 Comments