தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 145 பேர் கைது


நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்துள்ள காரணத்தால் தற்போது தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறுவோறுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது.

இதற்கயை நேற்றைய தினம் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 145 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடக பேச்சாளர் பிரதி காவற்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறுபவர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்திய பின்னர் அவர்கள் குற்றவாளி என நிருபிக்கப்பட்டால் 10,000 ரூபா தண்டப்பணம் மற்றும் 6 மாத சிறைத்தண்டனை விதிக்கப்படுவதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார்.

No comments: