நாட்டில் ஒரே நாளில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 1000 ஐ கடந்தது


நாட்டில் மேலும் 422 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதற்கமைய இன்றைய தினம் இதுவரையில் 1096 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாட்டில் முதன்முறையாக ஒரே நாளில் 1000ம் தொற்றாளர்களை கடந்த முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

அதனடிப்படையில் இலங்கையில் 103,472 பேருக்கு இதுவரையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


No comments: