டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் கொரோனா தடுப்பூசி வழங்கும் பணிகள் இன்று ஆரம்பம்

க.கிஷாந்தன்


நுவரெலியாவில் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையின் வைத்தியர்களுக்கும், ஊழியர்களுக்கும் கொரோனா தடுப்பூசி வழங்கும் பணிகள் (01.02.2021) இன்று ஆரம்பிக்கப்பட்டன.

இந்தியாவிலிருந்து கொண்டு வரப்பட்ட கொரோனா தடுப்பூசிகள் வழங்கும் பணிகள் நாடு  முழுவதும் தற்போது வழங்கப்பட்டு  வருகின்றன.

இந்நிலையில் டிக்கோயா வைத்தியசாலையில் பணிபுரியும் வைத்தியர்கள், தாதியர்கள் ஊழியர்கள் ஆகியவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் நிகழ்வு வைத்திய அதிகாரி வைத்தியர் தம்மிக்க அழகப்பெரும தலைமையில் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் இன்று (01.02.2021) காலை இடம்பெற்றன.

இதன் போது இங்கு பணிபரியும் சுமார் 150 இற்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

இதே நேரம் குறித்த தடுப்பூசி பாதுகாப்பு துறையினர் மற்றும் சுகாதார துறையினர் ஆகியோருக்கு முன்னுரிமை வழங்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.No comments: