கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பிலான தீர்மானம்


கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் பாடசாலைகள் மீண்டும் எதிர்வரும் 15ம் திகதி ஆரம்பமாகவுள்ளன என கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கம்பஹா மாவட்டத்தில் உள்ள 590 பாடசாலைகளில் 589 பாடசாலைகளையும், களுத்துறை மாவட்டத்தில் உள்ள 446 பாடசாலைகளில் 442 பாடசாலைகளையும் கல்வி நடவடிக்கைகளுக்காக எதிர்வரும் 15ம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கொழும்பு மாவட்டத்தில் பாடசாலைகளை மீண்டும் திறப்பது குறித்த இறுதித் தீர்மானம் இந்த வாரம் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், மேல் மாகாணத்திலுள்ள பாடசாலைகளில் 11ம் வகுப்புக்கான கற்பித்தல் நடவடிக்கைகள் அண்மையில் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments: