தோட்டப்புறங்களில் உள்ள தொடர் லயன்குடியிருப்புகளில் ஏற்படும் தீ விபத்தினை தடுப்பது தொடர்பான விஷேட கலந்துரையாடல்

பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்


நுவரெலியா மாவட்டத்தில் உள்ள தோட்டப்புறங்களில் உள்ள தொடர் லயன் குடியிருப்புகளில் மின்சார கோளாறு காரணமாக ஏற்படும் தீவிபத்தினை எவ்வாறு தடுப்பது என்பது தொடர்பில் இன்று (12) முதற்கட்டமாக விஷேட கலந்துரையாடல் ஒன்று நோர்வுட் பிரதேச சபையின் ஏற்பாட்டில் நோர்வுட் பிரதேச சபையில் இடம்பெற்றது . 

இதன்போது நுவரெலியா மாவட்ட செயலாளர் ரோகன புஸ்பகுமாரவின் பணிப்புரைக்கு அமைய நுவரெலியா மாவட்டத்தில் இடம்பெறுகின்ற அனர்த்தங்களில் விஷேடமாக தீபத்தினை எவ்வாறு தடுப்பது தொடர்பில் ஆராயப்பட்டது .

இந்த கலந்துரையாடல் நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் ரஞ்சித் அலாக்கோன், நுவரெலியா இராணுவ முகாமின் கேனல் ரவிந்திரகுமாரா,நோர்வுட்பிரதேச சபையின் தலைவர் ரவி குழுந்தைவேல்,பொகவந்தலாவ பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி சாந்தபண்டார,நோர்வுட்பொலிஸ்நிலையத்தின் பொறுப்பதிகாரி ரனவீர,தோட்ட,மனிதவள பெருந்தோட்ட நிறுவனத்தின் பணிப்பாளர் நாலக்க , தோட்டமுகாமையாளர்கள், மின்சார சபையினர் என பலரும் கலந்து கொண்டனர்.

இந்த கலந்துரையாடலில் அண்மையில் நோர்வூட்பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் திடீர் தீ விபத்து காரணமாக தொடர் லயன் குடியிருப்புகள் எரிந்தமையினால் மக்கள் உடமைகளும்  எரிந்துள்ளது.

இதனால் இந்த தீ விபத்தினை தடுக்கும் நோக்கில் விஷேட வேலைத்திட்டம் ஒன்றினை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதில் ஒவ்வொரு தோட்டப்புறங்களுக்கும் தீயணைக்கும் வானகங்களை வழங்குதல், ஒரு லயன் குடியிருப்பில் தீ பரவல் ஏற்படும்போது மின்சாரத்தை உடனே எவ்வாறு துண்டிப்பது  தொடர்பிலும் ஆராயப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்த தீர்மானங்கள் அனைத்தும் வெகுவிரைவில் கொண்டு கொண்டுவரப்படுமென கலந்துரையாடலின் போது தீர்மானம் எட்டப்பட்டது


No comments: