கொரோனா தொற்றுக்குள்ளான மாணவர்களுக்கு விசேட பரீட்சை நிலையங்கள்


கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான கல்விப்பொதுத்தராதர சாதாரண  மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றுவதற்கு மாவட்ட ரீதியில் விசேட பரீட்சை நிலையங்கள் ஸ்தாபிக்கப்படவுள்ளன.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் அனுமதிக்கிணங்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

இதன்படி அனைத்து பரீட்சை நிலையங்களிலும் தனிமைப்படுத்தப்பட்ட வகுப்பறை ஒன்றை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இந்த விடயம் தொடர்பில் பாடசாலை அதிபர்கள், பிரதி அதிபர்கள் வலய மற்றும் மாகாண கல்விப்பணிப்பாளர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே 2020ம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சை எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதி தொடக்கம் 4 ஆயிரத்து 513 மத்திய நிலையங்களில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: