கடந்த 24 மணித்தியாலத்தில் 10 பேர் கைது


தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டில் கடந்த 24 மணித்தியாலத்தில் 10 பேர் கைது செய்யப்பட்டுள்னர்.

பாதுகாப்பு முகக் கவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளியினை கடைபிடித்தல் போன்ற விதிமுறைகளை மீறி செயற்பட்ட நபர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

கடந்த ஒக்டோபர் மாதம் 30ம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில், தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டில் 3095 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், கொரோனா தொற்றுப் பரவலைத் தவிர்க்கும் வகையில் நாடு முழுவதும் தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை தொடர்ந்தும் கடைபிடிக்குமாறும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை, மேல் மாகாணத்தில் சுகாதார விதிமுறைகளை தவிர்த்து செயற்படும் அரச மற்றும் தனியார் நிறுவனங்களை சோதனைக்குட்படுத்தும் நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன மேலும் தெரிவித்துள்ளார்.

No comments: