ஒலுவில் பிரதேசத்தில் ஏற்பட்ட மினி சூறாவளி காரணமாக ஒலுவில் பிரதேசத்தில் பாதிப்பு

எஸ்.அஷ்ரப்கான் 


ஒலுவில் பிரதேசத்தில் நேற்று திங்கட்கிழமை (01) இரவு 11.30 மணியளவில்  ஏற்பட்ட மினி சூறாவளி காரணமாக ஒலுவில்  பிரதேசத்தில் பிரதான வீதியில் தனியார் கடைகள் மற்றும் மிகவும் ஆழமான வேர்களைக் கொண்ட மரங்களெல்லாம் வேரோடு சாய்ந்து வீசப்பட்டு காணப்படுகிறது.

இந்த மினி சூறாவளி காரணமாக பிரதேசத்தில் காணப்படும் வீடுகள் மற்றும் கடைகள் சேதமடைந்துள்ளன. 

இந்நிலையில்   குறித்த  நேரத்தில் மின்சாரமும் உடனடியாக தடைபட்டது. 

இது விடயமாக மின்சார சபையின் அதிகாரி ஒருவர் குறிப்பிடும்போது, குறித்த நேரத்திலே மரம் முறிந்து விழுந்ததால் ஏற்பட்ட பாதிப்பின் காரணமாக மின்சாரம் தடைப்பட்டு உள்ளதாகவும் அதனை உடனடியாக ஊழியர்கள் சீர்படுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.
No comments: