நேற்றைய தினம் அதிகளவான தொற்றாளர்கள் பதிவு


நாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் தொற்று உறுதியான 942 பேரில் அதிகமானோர் கொழும்பு மாவட்டத்திலேயே அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதற்கமைய கொழும்பு மாவட்டத்தில் நேற்று மாத்திரம் 273 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக கொரோனா பரவல் கட்டுப்பாட்டு தேசிய செயற்பாட்டு மையம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கம்பஹா மாவட்டத்தில் 181 பேருக்கும் கண்டியில் 102 பேருக்கும் மாத்தறையில் 84 பேருக்கும் நேற்று தொற்று உறுதியானதாக கொவிட்-19 பரவல் கட்டுப்பாட்டு தேசிய செயற்பாட்டு மையம் அறிவித்துள்ளது.

அத்துடன் களுத்துறையில் 79 பேருக்கும் காலியில் 23 பேருக்கும் இரத்தினப்புரி மற்றும் மாத்தளை மாவட்டங்களில் தலா 19 பேருக்கும் அம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் தலா 15 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.

இதுதவிர பதுளை மாவட்டத்தில் 8 பேருக்கும் நேற்று கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளதாக கொவிட்-19 பரவல் கட்டுப்பாட்டு தேசிய செயற்பாட்டு மையம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments: