சுதந்திரதின நிகழ்வில் பங்கேற்ற சிவில் பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்த 50 பேருக்கு கொரோனா


கொழும்பில் இடம்பெற்ற சுதந்திரதின நிகழ்வில் பங்கேற்ற சிவில்  பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்த  50 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சுதந்திர தின  கொண்டாட்டத்தில் பங்கேற்ற சிவில்  பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்தவர்கள் சேருபிட்ட, கல்கிரியாகம  மற்றும் அம்பாறையில் உள்ள பஹல லந்த ஆகிய பகுதிகளில் உள்ள தனிமைப்படுத்தல் நிலையங்களில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்தனர்.

இவர்களிடம் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகளுக்கமைய குறித்த 50 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சுதந்திர தின  நிகழ்வில் கலந்துகொண்ட கதிர்காமம் பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரிக்கும்  கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சுதந்திர தின  நிகழ்வில் பங்கேற்பதற்கு முன்னதாக மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் அவருக்கு தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சுதந்திர  தின நிகழ்விற்குப் பின்னதாக மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகளுக்கமைய கதிர்காமம் பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரிக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

No comments: