நாடு திரும்பிய இலங்கையர்கள்


வெளிநாடுகளில் இருந்து இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேரப் பகுதிக்குள் 850 பயணிகள் நாடு திரும்பியுள்ளனர்.

அதன்படி 10 விமானங்களினூடாக ஐக்கிய அரபு எமிரேட்ஸின் துபாயிலிருந்து 108 பேரும், சவுதி அரேபியாவின் ரியாத்திலிருந்து 102 பேரும் வேறு நாடுகளில் இருந்து ஏனையவர்களும் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

விமான நிலையத்தை வந்தடைந்த பயணிகள் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக இலங்கை இராணுவத்தினரால் அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை இந்த காலகட்டத்தில் 10 விமானங்களினூடாக 843 பயணிகள் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்பட்டுள்ளனர்.

இதன் அடிப்படையில் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கடந்த 24 மணிநேரப் பகுதிக்குள் 20 பயணிகள் விமான சேவைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

No comments: