பாடசாலைகளில் சுத்தம் செய்யும் பணிகள் முன்னெடுப்பு
பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்
2021 ம் ஆண்டு முதலாம் தவணைக்கான பாடசாலைகள் எதிர்வரும் 11 ம் திகதி மேல்மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களில் பாடசாலைகள் தவிர்ந்த ஏனைய பாடசாலைகள் திறக்கப்படவுள்ளன.
இந்நிலையில் நுவரெலியா மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளும் முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக திறக்கப்படவுள்ள நிலையில் பாடசாலைகளில் சுத்தம் செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அந்தவகையில் ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளும் எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பிக்கபட உள்ள நிலையில் பாடசாலை அதிபர்,ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் ஆகியோர் இணைந்து பாடசாலை வாளாகம் மற்றும் மண்டபங்கள் போன்றவற்றை சுத்தம் செய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் பொது சுகாதார அதிகாரிகளின் பணிப்புரைக்கமைய பாடசாலைகளுக்கு கிருமிநாசினிகள் தெளிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
No comments: