மட்டக்களப்பு (களப்பு) நீரோடையில் ஒருவர் சடலமாக மீட்பு

கனகராசா சரவணன்


மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள பெரிய உப்போடை நீரோடையில் (களப்பு) இறால் பிடிப்பதில் ஈடுபட்ட ஒருவர்,முதலைக்கடித்து உயிரிழந்த நிலையில் அந்த பகுதியிலுள்ள கீரியோடை நீரோடையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

குமாரபுரம் புன்னைச்சோலையைச் சேர்ந்த 2 பிள்ளைகளின் தந்தையான 48 வயதுடைய ஆரோக்கியநாதன் மரியதாஸன் என்பவரே இவ்வாறு உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

குறித்த நபர் வழமைபோல நேற்று (திங்கட்கிழமை) மாலை பெரிய உப்போடைக் களப்பு பகுதில் இறால் பிடிப்பதற்கு சென்று இரவாகியும் வீடு திரும்பவில்லை.

இதனையடுத்து உறவினர்கள் அவரை தேடிய நிலையில் இன்று பகல் 3 மணியளவில் கிரியோடை நீரோடையில் முதலைக்கடித்து உயிரிழந்த நிலையில் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.  

இதனைத் தொடர்ந்து சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதோடு,இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.


No comments: