கிழக்கு மாகாணத்தில் இதுவரை 1,323 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்


கிழக்கு மாகாணத்தில் கடந்த 24 மணித்தியாலத்தில் 38 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக, கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அ.லதாகரன் தெரிவித்துள்ளார்.

இதன்படி, கிழக்கு மாகாணத்தில் இதுவரையான காலப்பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளான ஆயிரத்து 323 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், மட்டக்களப்பு மாவட்டத்தில் 264 பேரும், திருகோணமலை மாவட்டத்தில் 173 பேரும், அம்பாறை பிராந்தியத்தில் 34 பேரும், கல்முனை பிராந்தியத்தில் 852 பேரும் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டவர்களில் 539 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதுடன், 802 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இதுவரையான காலப்பகுதியில் கிழக்கு மாகாணத்தில் 7 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாகவும் கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அ.லதாகரன் தெரிவித்துள்ளார்.

No comments: