நாடு திரும்பிய இலங்கையர்கள்


கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக கடந்த 24 மணிநேர காலப்பகுதிக்குள் 20 விமானங்கள் ஊடாக 1,183 பயணிகள் தமது பயண நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

இதற்கமைய, குறித்த காலப்பகுதிக்குள் கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக வெளிநாடுகளில் நிர்கதிக்குள்ளாகி இருந்த 406 இலங்கையர்கள் 10 விமானங்கள் ஊடக நாட்டை வந்தடைந்துள்ளனர்.

இதன்படி,  ஐக்கிய அரபு ராஜ்ஜியத்தில் இருந்து 182  பேரும், ஜப்பானின் நரீட்டா நகரில் இருந்து 53 பேரும்  நாட்டை வந்தடைந்துள்ளனர்.

இவ்வாறு, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தவர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை, குறித்த காலப்பகுதியில் 777 இலங்கையர்கள் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து 10 விமானங்கள் ஊடாக வெளிநாடுகளுக்கு பயணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: