மூவரின் உயிரைக் காவுகொண்ட கோர விபத்து


கொழும்பு – மினுவாங்கொடை பிரதான வீதியில் ஏக்கலை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்து இன்று காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வேன் ஒன்று வீதியை விட்டு விலகி, பஸ் தரிப்பிட சுவரொன்றுடன் மோதியதில் விபத்து நேர்ந்துள்ளது.

மேலும், உயிரிழந்தவர்களின் சடலங்கள் ராகமை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: