பூண்டுலோயா தவலந்தென்ன பகுதியில் இடம்பெற்ற வீதிவிபத்தில் இரு இளைஞர்கள் பலி

பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்


பூண்டுலோயா தவலந்தென்ன பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரண்டு இளைஞர்கள் டிப்பர் வண்டியில் மோதுண்டு உயிரிழந்துள்ளதாக பூண்டுலோயா பொலிஸார் தெரிவித்தனர். 

இச்சம்பவம் இன்று  (31) காலை 08.30மணியளவில் இடம்பெற்றதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

குறித்த மோட்டார் சைக்கிளில் பயணித்த இரண்டு பேரும் டிப்பர் வண்டியினை முந்திக்கொண்டு செல்ல முற்பட்ட வேளையில் டிப்பர் வண்டியில் மோதுண்டு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் பூண்டுலோயா கட்டுகத்துள்ள பகுதியை சேர்ந்த 19 வயதுடைய எம்.கே.ஜி.தினேஸ் என்ற இளைஞனும் நாவலப்பிட்டி பகுதியினை சேர்ந்த 19 வயதுடைய விமுர்த்தி சுதர்ஷன் ஆகிய இரண்டு இளைஞர்களுமே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக பூண்டுலோயா பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

சம்பவத்தில் உயிரிழந்த இரண்டு இளைஞர்களின் சடலங்களும் நாவலபிட்டி வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதோடு சம்பவம் தொடர்பில் டிப்பர் வண்டியின் சாரதி கைது செய்யப்பட்டு நீதவான் முன்னிலையில் முன்னிலைபடுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பூண்டுலோயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது


No comments: