நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்கள் பற்றிய விபரம்


நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 52,313 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 715 பேர் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்தே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

இதன்படி, பேலியகொடை கொரோனா கொத்தணியுடன் தொடர்புடைய 697 பேருக்கும், சிறைக்கைதிகள் 18 பேருக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, தொற்றில் இருந்து மேலும் 487 பேர் குணமடைந்து நேற்று  வீடுதிரும்பியுள்ளனர்.

இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 44,746 ஆக அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 7,311 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் தங்கியிருந்து சிகிச்சைபெற்று வருகின்றனர்.

இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.

தேசிய தொற்று நோய் தடுப்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த 82 வயதான, எதுல்கோட்டே பகுதியை சேர்ந்த பெண்ணொருவர் நேற்று உயிரிழந்துள்ளார்.

கொரோனா தாக்கம் மற்றும் இருதய நோய் ஆகியவற்றின் காரணமாகவே அவர் உயிரிழந்துள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து, நாட்டில் கொரோனா தொற்றுக் காரணமாக உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 256 ஆக உயர்வடைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

No comments: