நாட்டின் இன்றைய வானிலை


நாட்டின் பல பாகங்களில் இன்றும் மழையுடனான வானிலை நிலவும் என வளிமண்டளவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதன்படி வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், மாத்தளை மற்றும் அம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களிலும் மழையுடனான வானிலை நிலவும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

அத்துடன் மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் 100 மில்லிமீற்றர் வரையிலான மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் என எதிர்வுக்கூறப்பட்டுள்ளது.

மேலும் நாட்டின் ஏனைய பகுதிகளில் இன்று மாலை வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும்  குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனால், இடியுடன்கூடிய மழைபெய்யும் சந்தர்ப்பங்களில் பொதுமக்களை மிகவும் அவதானமாக செயற்படுமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவுறுத்தல் விடுத்துள்ளது.

No comments: