நாடு திரும்பிய இலங்கையர்கள்


நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 39 விமான சேவைகள் ஊடாக 1135 பேர் பயணங்களை மேற்கொண்டுள்ளனர்.

இன்று காலை 8.30 அளவில் நிறைவடைந்த 24 மணிநேர காலப்பகுதிக்குள் குறித்த பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

அத்துடன், கொரோனா தொற்று அச்ச நிலைமை காரணமாக 681 பேர் 20 விமானங்களின் ஊடாக நாடு திரும்பியுள்ளனர்.

இதேவேளை, தொழில் நிமித்தம் கட்டார் சென்றிருந்த நிலையில்  பல்வேறு துன்புறுத்தல்களை எதிர்நோக்கியதாக கூறப்பபடும் 293 பேர் நாடு திரும்பியுள்ளனர்.

கொரோனா தொற்று பரவல் காரணமாக வெளிநாடுகளில் நிர்க்கதிக்குள்ளாகியுள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்துவரும் அரசாங்கத்தின் விசேட வேலைத்திட்டத்திற்கு அமைய குறித்த இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர்.

இதன்படி, டுபாயிலிருந்து 83 பேரும், அபுதாபியிலிருந்து 77 பேரும், பாகிஸ்தானிலிருந்து 39 பேரும், பங்களாதேஷிலிருந்து 34 பேரும் இவ்வாறு நாட்டுக்கு அழைத்த வரப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் குறித்த காலப்பகுதியில் மேலும் 19 விமான சேவைகளினூடாக 454 பேர் தொழில்  நிமித்தம் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர்.

இவ்வாறு நாடு திரும்பிய அனைவருக்கும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டதோடு, இராணுவத்தினரால் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments: