மேல் மாகாணத்திலுள்ள பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கு எதிர்பார்ப்பு


சுகாதார வழிமுறைகளுக்கு அமைவாக மேல் மாகாணத்திலுள்ள பாடசாலைகளை பெப்ரவரி மாதம் 15ம் திகதிக்கு முன்னர் மீண்டும் ஆரம்பிப்பதற்கு எதிர்பார்ப்பதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

மேல் மாகாணத்திலுள்ள பாடசாலைகள் சிலவற்றுக்கு அமைச்சர் நேற்றைய தினம் கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டார். இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே கல்வி அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

கல்வி பொதுத்தராதர சாதாரண தர மாணவர்களுக்காக மேல் மாகாணத்தில் உள்ள பாடசாலைகள் தற்போது திறக்கப்பட்டுள்ளன.

கொவிட் தடுப்பு மருந்து வழங்கும் நடவடிக்கையின் போது ஆசிரியர்களுக்கும் முன்னுரிமை வழங்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

No comments: