73 ஆவது சுதந்திர தினம் - உள்நாட்டலுவல்கள் அமைச்சு விடுத்துள்ள கோரிக்கை


நாட்டின் 73வது  சுதந்திர தினத்தை முன்னிட்டு அரச மற்றும் தனியார் துறை உட்பட அனைத்து நிறுவனங்களிலும் வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்களிலும் தேசியக் கொடி ஏற்றுமாறு உள்நாட்டலுவல்கள் அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.

இதன்படி சுதந்திர தினமான பெப்ரவரி 4ம் திகதி முதல் 7ம் திகதி வரை குறித்த அனைத்து இடங்களிலும் தேசியக் கொடி ஏற்றுமாறு உள்நாட்டலுவல்கள் அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அரச அலுவலகங்கள் அமைந்துள்ள வளாகங்களில் மின்விளக்குகளை ஒளிர விடுமாறும் அமைச்சு வலியுறுத்தியுள்ளது.

நாட்டின் 73 ஆவது சுதந்திரம் செழிப்பான எதிர்காலம் வளமான தாய்நாடு எனும் தொனிப்பொருளில் கொண்டாடப்படவுள்ளதாக ஜனாதிபதி அறிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments: