சிங்கமலை வனப்பகுதியில் இருந்து நபர் ஒருவர் சடலமாக மீட்பு

பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்


ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹட்டன் சிங்கமலை வனப்பகுதியில்  இருந்து நபர் ஒருவர் சடலமாக மீட்கபட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று (12.01.2021)  காலை வேளையில் மீட்கபட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபர் நேற்றைய தினம் (11.01.2021)காலை 11.00 மணியளவில் சிங்கமலை வனப்பகுதிக்கு விறகு சேகரிக்க சென்றவர் எனவும்,  நேற்றைய நாள் முழுவதும் வீடு திரும்பாத காரணத்தினால் ஹட்டன் பொலிஸார் மற்றும்  பொது மக்கள்  இணைந்து தேடுல்  நடவடிக்கையில் ஈடுபட்ட போதே வனப்பகுதியில் இருந்து குறித்த நபர் சடலமாக மீட்கபட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொட்டகலை அந்தோனிமலை கே.ஜி.கே பிரிவை சேர்ந்த 65 வயதினை கொண்ட 03 பிள்ளைகளின் தந்தையான எம்.மகேஸ்வரன் என்பவரே சடலமாக மீட்கபட்டதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

மீட்கப்பட்ட சடலம் பிரேத பரிசோதனைக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட உள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். 

இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments: