மத்திய முகாமில் அனுமதியற்ற தற்காலிக கடைகள் அகற்றப்பட்டன

எஸ்.அஷ்ரப்கான்


அரச காணியை பாதுகாத்தல் எனும் ஜனாதிபதியின் எண்ணக்கருவுக்கு அமைவாக மத்திய முகாமில் காணப்படுகின்ற அரச காணியினை பாதுகாக்கும் வண்ணம் நேற்று (11) அனுமதியற்ற தற்காலிக கடைகள் முற்றாக அகற்றப்பட்டன.

நாவிதன்வெளி பிரதேச சபை  எல்லைக்குட்பட்ட மத்திய முகாம் பொலிஸ் நிலையமருகில் காணப்பட்ட அரச காணியில் கடந்த மூன்று வருட காலமாக அனுமதியின்றி தற்காலிகமாக மரக்கறி கடை நடாத்தி வந்த நபரின் கடை  நாவிதன்வெளி பிரதேச சபை தவிசாளர் அ. ஆனந்த அவர்களின் தலையீட்டினால் பிரதேச சபை உறுப்பினர் எம்.பி.நவாஸ் மற்றும் உத்தியோகத்தர்கள் ஊடாக முற்றாக அகற்றப்பட்டது. 

மேலும் கடை உரிமையாளருக்கு 2020.12.31 ற்கு முன்னர் கடையை அகற்றும்படி கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தும் அதனை பொருட்படுத்தாது இருந்தமையே இதற்கு காரணம் எனவும் இவ் அரச காணியில் பொதுச்சந்தை அமைத்து இன மதம் பாராமல் அனைத்து மக்களும் பிரயோசனம் அடைய வேண்டும் என்பதே தனது நோக்கம் என தவிசாளர் அ.ஆனந்த தெரிவித்தார்.

நாவிதன்வெளி பிரதேச சபை தவிசாளர் அ.ஆனந்த, மத்திய முகாம் பொலிஸ் பொறுப்பதிகாரி, பிரதேச சபை உறுப்பினர் எம்.பி.நவாஸ் மற்றும் உத்தியோகத்தர்கள் என பலரும் இங்கு பிரசன்னமாயிருந்தனர்.

No comments: