நாடு திரும்பிய இலங்கையர்கள்


குவைட்டில் தொழில் வழங்குனர்களினால் பல்வேறு நெருக்கடிகளுக்கு உள்ளாகியிருந்த 297 பேர் நாட்டை வந்தடைந்துள்ளனர்.

இதன்படி, அவர்கள் நேற்று இரவு 9.15 அளவில், கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான UL – 230 எனும் விமானம் ஊடாக அவர்கள் வருகை தந்துள்ளனர்.

வெளிநாடுகளில் நிர்க்கதிக்குள்ளாகியுள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்துவரும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தின் கீழ், அவர்கள் அழைத்துவரப்பட்டுள்ளனர்.

இதன்படி, குறித்த பயணிகள் விமான நிலையத்திலேயே பி.சி.ஆர்  பரிசோதனைக்குட்படுத்தப்பட்டு, முப்படையினரால் நடத்திச் செல்லப்படும் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டதாக  குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments: