29000 கிலோகிராம் கழிவுத் தொகையுடன் 7 பேர் கைது


29000 கிலோகிராம் கழிவுத் தேயிலையுடன் சந்தேச நபர்கள் 07 பேர் சீதுவ பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கோணஹேன பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

இவற்றை வௌிநாட்டிற்கு ஏற்றுமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

கழிவுத் தேயிலையை ஏற்றுமதிய செய்ய பயன்படுத்தப்பட்ட கொள்கலனும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேகநபர்களையும் கழிவுத் தேயிலையையும் மேலதிக விசாரணைகளுக்காக சீதுவ பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

No comments: