ஆயிரம் ரூபா நாளாந்த சம்பளம் தொடர்பிலான மாற்று யோசனைகள் அடுத்த அமைச்சரவை கூட்டத்தில்! - அமைச்சர் நிமல்


பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான ஆயிரம் ரூபா நாளாந்த சம்பளம் தொடர்பிலான மாற்று யோசனைகளை அடுத்த அமைச்சரவை கூட்டத்தில் சமர்ப்பிக்க எதிர்பார்த்துள்ளதாக தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

முதலாளிமார் சம்மேளனத்துடன் நேற்று இடம்பெற்ற பேச்சுவார்த்தை வெற்றியளிக்காத நிலையிலேயே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த சம்பளமாக ஆயிரம் ரூபாய் வழங்கப்பட வேண்டும் என்ற அரசாங்கத்தின் தீர்மானத்தில் மாற்றம் இல்லை எனவும் அவர் கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயத்தில் இரண்டு தரப்பிற்கும் நியாயமான தீர்மானமொன்றை எட்டுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்ட போதிலும், அதனை அவர்கள் தவறவிட்டுள்ளதாகவும் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மேலும் சுட்டிக்காட்டியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments: