வலம்புரி சங்கை விற்பனை செய்வதற்கு முற்பட்ட இருவர் கைது


முல்லைத்தீவு – செல்லபுரம் பகுதியில் வலம்புரி சங்குடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய, நேற்று முற்பகல் சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதன்போது வலம்புரி சங்கை விற்பனை செய்வதற்கு முற்பட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் வருகை தந்த வேனும் இதன்போது கைப்பற்றப்பட்டு, முல்லைத்தீவு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

ராகம பகுதியைச் சேர்ந்த 39 மற்றும் 69 வயதான இருவரே சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர்கள் இன்று முல்லைத்தீவு நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளதாகவும்,முல்லைத்தீவு பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: