2020ஆம் ஆண்டு தரம்-5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை பாராட்டி கெளரவிக்கும் நிகழ்வு

றாசிக் நபாயிஸ்,ரி.கே.றஹ்மத்துல்லாஹ், ஏ.எல்.எம்.சினாஸ்                                              

அம்பாரை மாவட்டத்தில் அட்டாளைச்சேனை பிரதேசத்தில் இயங்கி வரும் அரச சார்பற்ற அமைப்பான சிறந்த இலங்கை உருவாக்குவதற்கான மக்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடைமுறைப்படுத்தப்படுகின்ற ஊக்கப்படுத்தல் செயற்திட்டத்தினுடாக இளைஞர், யுவதிகள் மற்றும் மாணவர்களுக்கு என பல செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.

அந்த வகையில் அக்கரைப்பற்று கல்வி வலயத்தில் கடந்த வருடம் 2020ஆம் ஆண்டு தரம்-5 புலமைப்பரிசில் பரீட்சையில் வெட்டுப் புள்ளிக்கு மேல் புள்ளிகளை பெற்று  சித்தியெய்திய மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வின் முதல் கட்டமாக அட்டாளைச்சேனைச் பிரதேசத்தில் சித்தியடைந்த 69 மாணவ, மாணவிகள் இன்று (28)  அட்டாளைச்சேனை மத்திய கல்லூரியின் கூட்ட மண்டபத்தில் வைத்து சுகாதார சட்ட விதிகளுக்கு அமைய  கெளரவிக்கப்பட்டார்கள்.

இந்நிகழ்வு சிறந்த இலங்கை உருவாக்குவதற்கான மக்கள் ஒன்றியத்தின் தலைவரும் அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ அலகின் உதவிப் பணிப்பாளருமான எம்.ஏ.சி.முகம்மட் றியாஸ் தலைமையில் இடம் பெற்றது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக அம்பாறை மாவட்டச் செயலக மேலதிகச் செயலாளர், வீ.ஜெகதீசன், விஷேட அதிதியாக

அக்கரைப்பற்று வலயக்கல்விப் பணிப்பாளர், அல்-ஹாஜ்: ஏ.எல்.முஹம்மட் ஹாசிம், கோட்டக் கல்வி அதிகாரி, பாடசாலை அதிபர்கள், அமைப்பின் அங்கத்தினர்கள் மற்றும் பொற்றோர்கள் எனப் பலரும் கலந்து கொண்டார்கள்.

No comments: