35 இலட்சம் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் ஒருவர் கைது


மஹரகம, எரெவ்வல பகுதியில் 35 இலட்சம் ரூபா பெறுமதியான டெட்ரா ஹைட்ரோ கெனபினோல் எனும் ஹேஷ் ஒயில் எனும் போதைப்பொருளுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரிடம் இருந்து டெட்ரா ஹைட்ரோ கெனபினோல் எனும் ஹேஷ் ஒயில் எனும் போதை பொருள் 1 கிலோ 5 கிராம் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

31 வயதுடைய பன்னிபிட்டிய பகுதியை சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.


No comments: