நாட்டின் இன்றைய வானிலை


நாட்டின் சில பகுதிகளில் இன்றைய தினம் 100 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகக் கூடும் என எதிர்கூறப்பட்டுள்ளது.

இதன்படி, வடக்கு, கிழக்கு,  மத்திய , வட மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின்  சில இடங்களில் இவ்வாறு 100 மில்லிமீற்றர் வரையான மழைவீழ்ச்சி பதிவாகக் கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், நாட்டின் மேலும் சில பகுதிகளில் 75 மில்லிமீற்றர் வரையான மழைவீழ்ச்சி பதிவாகக் கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில், தற்காலிகமாக ஏற்படும் காற்றும் மற்றும் மின்னல் தாக்கங்களில் இருந்து பாதுகாத்துக் கொள்ளும் பொருட்டு உரிய நடவடிக்கைளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது

No comments: