சர்வதேச ரீதியில் கொரோனா தொற்று


சர்வதேச ரீதியில் கொரோனா தொற்றினால் பாதிக்கபட்டவர்களின் எண்ணிக்கை 9 கோடியை கடந்துள்ளது.

அமெரிக்கா, இந்தியா, பிரேஸில், பிரித்தானியா மற்றும் ரஸ்யா ஆகிய நாடுகளில் நாளுக்குநாள் அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுகின்றனர்.

இந்த நிலையில், சர்வதேச ரீதியில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 19 இலட்சத்து 33 ஆயிரத்தை கடந்துள்ளது.

இதேவேளை, சர்வதேச நாடுகள் சிலவற்றில் புதிய கொரோனா வைரஸ் தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளதை தொடர்ந்து, தொற்றுப்பரவல் மேலும் அதிகரிக்க கூடுமெனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

No comments: