கொரோனா தொற்றுக்குள்ளான கைதி ஒருவர் உயிரிழப்பு


மஹர சிறைச்சாலையில் கொரோனா தொற்றுக்குள்ளான கைதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, கொரோனா தொற்று காரணமாக சிறைச்சாலைகளில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 08 ஆக உயர்வடைந்துள்ளது.

அத்துடன், மஹர சிறைச்சாலையில் மேலும் இரண்டு கைதிகளுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது

இந்த நிலையில், கொரோனா தொற்றுக்குள்ளான கைதிகளின் மொத்த எண்ணிக்கை 4,144 ஆக உயர்வடைந்துள்ளது.

இதன்படி, வெலிக்கடை சிறைச்சாலையில் 880 கைதிகளுக்கும், மகசின் சிறைச்சலையில் 854 கைதிகளுக்கும், மஹர சிறைச்சாலையில் 813 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

அத்துடன்,  கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் 425 பேருக்கும், நீர்கொழும்பு சிறைச்சாலையில் 351 பேருக்கும் இதுவரை தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவிக்கின்றது.

அத்துடன், சிறைச்சாலை அதிகாரிகள் 129 பேருக்கும், இதுவரை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில்,  3,850 கைதிகள் மற்றும் 123 அதிகாரிகள் இதுவரை கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளதாக, சிறைச்சாலைகள் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

No comments: