முகக் கவசங்கள் அணியாத குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்களில் 48 பேருக்கு கொரோனா


மேல் மாகாணத்தில் முகக் கவசங்களை அணியாத குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நபர்களில், இதுவரை 48 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதிப் பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவிக்கின்றார்.

முகக் கவசங்களை அணியாத நபர்களை, கொரோனா தொற்று பரிசோதனைக்கு உட்படுத்தும் நடவடிக்கை, கடந்த ஐந்தாம் திகதி முதல் மேல் மாகாணத்தில் ஆரம்பிக்கப்பட்டது

இதன்படி, முகக் கவசங்களை அணியாது செயற்பட்ட 121 பேர், நேற்றைய தினம் பி.சி.ஆர்  மற்றும் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரித்தார்.

இந்த நிலையில், கடந்த ஐந்தாம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில், மேல் மாகாணத்தில் 2,513 பேர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்த நிலையிலேயே, அவர்களில் 48 பேருக்கு, இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

No comments: