கல்முனை தமிழ் சேனை இளைஞர் அமைப்பின் பொங்கல் தின விசேட பூசை - பாண்டிருப்பு திரௌபதி அம்மன் ஆலயத்தில்

ஏ.எல்.எம்.ஷினாஸ்         


கல்முனை பிரதேச தமிழ் மக்கள் தமது தைத்திரு நாளான இன்று (14.01.2021) தைப்பொங்கல் நிகழ்வுகளை சுகாதார சட்ட விதிமுறைகளுக்கடைய தமது இல்லங்களில் கொண்டாடி வருகின்றனர்.

கல்முனை தமிழ் சேனை இளைஞர் அமைப்பு வருடா வருடம் தமது பொங்கல் திருவிழா நிகழ்வுகளை கல்முனை மாநகரத்தில் கொலாகலமாக நடாத்தி வருவது வழமையாகும்.

எனினும் இம்முனை கொரோனா தொற்றுநோய் அச்சுறுத்தல் காரணமாக பொதுமக்கள் ஒன்றுகூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் அரசாங்கத்தின் சுகாதார சட்ட விதிமுறைகளுக்கு அமைய பொங்கல் நிகழ்வும் விசேட பூசையும் மிகவும் எளிமையான முறையில் பாண்டிருப்பு திரௌபதி அம்மன் ஆலயத்தில் நடைபெற்றது.

குறிப்பிட்ட நபர்கள் மாத்திரம் கலந்து கொண்டு சமூக இடைவெளி பின்பற்றப்பட்டு இந்த பொங்கல் நிகழ்வு நடைபெற்றது.


No comments: