அம்பாறையில் கொவிட் -19 தடுப்பூசி ஏற்றும்பணி ஆரம்பம்

சந்திரன் குமணன்


அம்பாறை மாவட்டத்தின் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் மருத்துவ சேவையாளர்கள் உள்ளிட்ட சுகாதாரத் துறையினருக்கு கோவிட் -19 தடுப்பூசி மருந்து ஏற்றும் பணி இன்று சனிக்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கல்முனை சுகாதார சேவைகள் பணிமனையில் முதலில் சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பு கொவிஷீல்ட் தடுப்பூசி செலுத்தும் பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டது .

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் குணசிங்கம் சுகுணன்  ஆரம்பித்து வைத்தார்.

கல்முனை சுகாதார சேவைகள் பணிமனைக்கு உட்பட சுகாதார வைத்தியதிகாரி பணிமனைகள் , கடமை புரியும் வைத்தியர்கள், சுகாதார ஊழியர்களுக்கு 4870 இத்தடுப்பூசிகள் ஏற்றப்படவுள்ளது.
No comments: