என்டிஜன்ட் பரிசோதனையில் மேலும் 7 பேருக்கு கொரோனா


மேல் மாகாணத்தில் இருந்து வேறு மாகாணங்களுக்கு வெளியேறும் நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட ரப்பிட் என்டிஜன் பரிசோதனையில் மேலும் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

மேல் மாகாணத்தில் இருந்து வேறு மாகாணங்களுக்கு வெளியேறுவதற்கு முற்பட்ட 326 பேரிடம் நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட ரப்பிட்  என்டிஜன் பரிசோதனையில் குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதேவேளை குறித்த தொற்றாளர்களுடன் தொடர்புடையவர்களை அடையாளம் காணும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பிரதிப்பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.

No comments: