மோட்டார் பந்தயத்தில் ஈடுபடுப்பட்ட குற்றச்சாட்டில் 12 பேர் கைது


பிலியந்தலை பகுதியில் சட்டவிரோதமான முறையில் மோட்டார் பந்தயத்தில் ஈடுபடுப்பட்ட குற்றச்சாட்டில் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிலியந்தலை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலன் பிரகாரம்  முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் நேற்று இரவு  குறித்த சந்தேச நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

 இதேவேளை மோட்டார் பந்தயத்தில் ஈடுபடுப்படுத்தப்பட்ட 12 மோட்டார் சைக்கிள்கள் பொலிஸாரினால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் பிரதிப்பொலிஸ் மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ள  நபர்கள் இன்று கெஸ்பேவ நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோதமான முறையில் மோட்டார் பந்தயத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 18 முதல் 26 வயதுக்கிடைப்பட்டவர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனிடையே நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில்  கடந்த 24 மணிநேரத்தில் 13 உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

நேற்றைய நாளில் மாத்திரம் 7 உயிரிழப்புக்கள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில்  முன்னதாக காணங்களுக்குள்ளான நிலையில் சிகிச்சைப்பெற்றுவந்த மேலும் 6 பேர் நேற்று உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை மோட்டார் சைக்கிள் சாரதிகள் மற்றும் பாதாசாரிகள் இவ்வாறு உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது.

No comments: