நேற்றைய தினம் 6 கொரோனா மரணங்கள் - முழு விபரம்
கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் மேலும் 6 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு உறுதிபடுத்தியுள்ளது.
இதன்படி கொழும்பு 03 பகுதியைச் சேர்ந்த 68 வயதான பெண் ஒருவர் கடந்த 3ம் திகதி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
இவரது மரணத்திற்கான காரணமாக நியுமோனியா மற்றும் கடும் நீரிழவு நோய் ஆகியன அடையாளம் காணப்பட்டுள்ளன.
அத்துடன், கொழும்பு 15 பகுதியைச்சேர்ந்த 80 வயதுடைய ஆண் ஒருவர் கடந்த 15ம் திகதி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
இவரது மரணத்திற்கான காரணமாக கொரோனா நியுமோனியா அடையாளம் காணப்பட்டுள்ளது.
இதன்படி, மோதர பகுதியைச் சேர்ந்த 75 வயதுடைய ஆண் ஒருவர் கடந்த 15ம் திகதி முதியோர் இல்லத்தில் கொரோனா நியுமோனியா காரணமாக உயிரிழந்துள்ளார்.
அத்துடன், களுத்துறை வடக்கு பகுதியைச்சேர்ந்த 65 வயதுடைய ஆண் ஒருவர் களுத்துறை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் கடந்த 14 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.
இவரது மரணத்திற்கான காரணமாக கொரோனா நியுமோனியா, இருதய நோய் மற்றும் கடும் நீரிழவு நோய் ஆகியன அடையாளம் காணப்பட்டுள்ளன.
இந்த நிலையில், தெஹிவளை பகுதியைச்சேர்ந்த 63 வயதுடைய இரணவில சிகிச்சை மத்திய நிலையத்தில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அதிக நியுமோனியா காரணமாக கடந்த 18ம் உயிரிழந்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, இரத்தினபுரி பகுதியைச்சேர்ந்த 65 வயதுடைய ஆண் ஒருவர் ஹோமோகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொரோனா நியுமோனியா காரணமாக கடந்த 18ம் திகதி உயிரிழந்துள்ளார்.
இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 270 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments: