சபாநாயகர் தலைமையில் இன்றைய பாராளுமன்ற அமர்வு


பாராளுமன்றம் இன்று  காலை 10 மணிக்கு கூடவுள்ளது.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்றைய அமர்வு இடம்பெறவுள்ளது.

இந்த வாரத்திற்கான பாராளுமன்ற சபை அமர்வை 2 நாட்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்துவதற்கு நேற்று நடைபெற்ற கட்சித் தலைவர்களுக்கான கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

4 பாராளுமன்ற உறுப்பினர்கள், உத்தியோகத்தர்கள், பாதுகாப்பு பிரிவினர் உள்ளிட்ட 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டமையால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.


Post a Comment

0 Comments