கடந்த 24 மணிநேரத்தில் 7 வீதி விபத்துகள் பதிவு
கடந்த 24 மணிநேரத்தில் மொத்தம் 7 வீதி விபத்துகள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோகண தெரிவித்துள்ளார்.
இவ்விபத்துகளில் இரு மோட்டார் சைக்கிள் ஓட்டுனர்கள், நான்கு பாதசாரிகள், சைக்கிள் ஓட்டுனர் ஒருவர் என எழுவர் பலியாகியுள்ளதுடன் 32 பேர் காயமடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை இந்த விபத்துகளில் பாதசாரிகள் மற்றும் சிறிய வாகனங்களின் ஓட்டுனர்களே அதிகளவில் பாதிப்படைவதாகவும் எனவே பொதுமக்கள் வீதி விதிமுறைகளை முறையாகப் பின்பற்றுமாறும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
No comments: