கல்முனை தமிழ் இளைஞர் சேனை அமைப்பினால் பாண்டிருப்பில் வீடொன்று கையளிப்பு

செ.துஜியந்தன்


கல்முனை பிராந்திய தமிழ் இளைஞர் சேனை அமைப்பினால் பாண்டிருப்பில் வருமானம் குறைந்த குடும்பம் ஒன்றிற்கு நான்கு இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட வீடு ஒன்றை கையளிக்கும் நிகழ்வு இன்று (28) தமிழ் இளைஞர் சேனை அமைப்பின் தலைவர் என்.சங்கீத் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வி.ஜெகதீசன் கலந்து கொண்டார். அத்துடன் அருள்தந்தை நிர்மல் உட்பட கல்முனைப் பிராந்திய தமிழ் இளைஞர்சேனையின் உறுப்பினர்கள் எனப்பலர் கலந்து கொண்டனர்.

கல்முனை தமிழ் இளைஞர்சேனையானது கல்வி, சமூகம், சமயம், வாழ்வாதாரம் எனப்பலதரப்பட்ட சேவைகளை இனங்கண்டு முன்னெடுத்துவருகின்றது. 

இதற்கமைய பாண்டிருப்பு கடற்கரைப் பிரதேசத்தில் வசிக்கும் வறுமைக்கோட்டிற்குட்பட்ட கலை ஞானதர்சினி என்பவரின் குடும்பத்திற்கு வீடில்லா குறையை நிவர்த்திசெய்யும் வகையில் கல்வீடு ஒன்றை இளைஞர்சேனை அமைத்துக்கொடுத்துள்ளது. இதற்கான நிதி அனுசரணையை சுவிஸ் விஜயகுமாரன் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கல்முனை தமிழ் இளைஞர்சேனையின் இவ் வருடத்திற்கான முதலாவது நற்பணியினை தைப்பூசம் நன்னாளில் அரம்பித்துள்ளதையிட்டு மகிழச்சியடைவதாக சேனையின் தவைலர் என்.சங்கீத் தெரிவித்தார்.


No comments: